ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். பயங்கரவாதியிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள்,கைத்துப்பாக்கி, 3 கையெறி குண்டுகள் மற்றும் ஒரு வெடிமருந்து பை ஆகியவை கைப்பற்றப்பட்டு ள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.அதே போல், பாரமுல்லாவில் உள்ள கர்ஹாமா குன்சர் பகுதியில் நடந்த மற்றொரு என்கவுன்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். கொல்லப்பட்ட நபர், லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய பயங்கரவாதி என அடையாளம் காணப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More