ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை கோரிய வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.டி. ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தொடர்ந்து விசாரித்து வந்தது.இதையடுத்து, வாதங்கள் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்திருந்தது.இந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.அதில், சென்னை மெரீனாவில் நடைபெற்ற போராட்டங்களை சுட்டிக்காட்டி நீதிபதிகள் தீர்ப்பை வாசித்தனர். நீதிபதிகள் தீர்ப்பில், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழ்நாடு அரசு அளித்த ஆவணங்கள் திருப்தி அளிக்கும் வலையில் உள்ளன. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாசாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என்ற தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தத்தை ஏற்றுக்கொள்கிறோம்.ஜல்லிக்கட்டு தொடர்பாரக தமிழ்நாடு அரசின் சட்டம் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் இல்லை.எனவே, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடையில்லை என்று நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More