உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட் மற்றும் தீபங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், இனி வரும் காலத்தில், ஜாமின் உத்தரவுகளில், எப்.ஐ.ஆர்., எண், தேதி, சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மற்றும் செய்த குற்றம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய விபரங்கள் முறையாக பதிவு செய்யப்படுவதை, உயர் நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த உத்தரவு, அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் அவற்றின் பதிவாளர்கள் வாயிலாக அனுப்பப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். உயர் நீதிமன்றங்கள் அனைத்திலும், ஜாமின் உத்தரவுகளில், ஒரே மாதிரியான நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. பெரும்பாலான சமயங்களில், ஜாமின் உத்தரவுகளில், வழக்கில் உள்ள குற்றங்களின் தன்மை குறிப்பிடப்படுவதில்லை.எனவே,இனி வரும் காலத்தில், ஜாமின் உத்தரவுகளில், எப்.ஐ.ஆர்., எண், தேதி, சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மற்றும் செய்த குற்றம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய விபரங்கள் முறையாக பதிவு செய்யப்படுவதை, உயர் நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த உத்தரவு, அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் அவற்றின் பதிவாளர்கள் வாயிலாக அனுப்பப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நாங்குனேரி- மேட்டுப்பாளையம் வழித்தடம்: 24-ல் ரயில் வேக சோதனை.
நாங்குனேரி- மேட்டுப்பாளையம் இடையே இரட்டைப் பாதையில் வரும் 24-ஆம் தேதி தெற்கு ரயில்வே...
Read More