Mnadu News

ஜார்க்கண்ட் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: மருத்துவ தம்பதி உள்பட 6 பேர் பலி.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் மிகப்பெட்டிய கட்டடத்தின் இரண்டாம் தளத்தில் ஹஸ்ரா மருத்துவமனை இயங்கி வந்த நிலையில், அங்கு தீப்பிடித்து, மளமளவென மருத்துவமனை முழுவதும் தீப்பற்றியது. இன்று காலை 10 மணியளவில்தான் முழுமையாக தீ அணைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் டாக்டர் பிரேமா, டாக்டர் விகாஸ் ஹஸ்ரா மற்றும் நான்கு ஊழியர்கள், இந்த மருத்துவமனை வளாகத்துக்குள் அமைந்திருக்கும் அவர்களது வீடுகளில் உறங்கிக் கொண்டிருக்கும் போது இந்த விபத்து நேர்ந்ததால், அனைவரும் தீ விபத்தில் சிக்கி பலியானதாகக் கூறப்படுகிறது.அதேவேளையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுளள்னர். மின் கசிவு காரணமாக இந்த விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.
மருத்துவமனையில் எந்த பாதுகாப்புக் கருவிகளும் இல்லை என்றும், பல்வேறு அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருந்ததும் பயங்கர தீ விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது

Share this post with your friends