ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் வராதோர் மற்றும் சிவப்பு ரேஷன் கார்டு இல்லாத நோயாளிகளுக்கு உயர் சிகிச்சைகளுக்கு கட்டணம் வசூலிக்க இருப்பதாக ஜிப்மர் ஏற்கெனவே அறிவித்து இருந்தது. அதன்படி, ஏப்ரல் 1 முதல் மொத்தம் 63 வகையான உயர் சிகிச்சைகளுக்கு 500 ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.இந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் குறிப்பிட்ட வகை நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு கட்டணம் என்ற அறிவிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More