வாரிசு படக்குழு:
வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் விஜய், ராஷ்மிகா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு, ஶ்ரீகாந்த் போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்து பொங்கலை முன்னிட்டு வெளியானது வாரிசு திரைப்படம்.

விஜய்யின் பொங்கல் சென்டிமென்ட்:
வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு விஜய் படங்கள் வருவது உண்டு. அப்படி வெளியான பல படங்கள் வெற்றி படங்களாகவே இதுவரை அமைந்து உள்ளது. அப்படி வெளியாகி வசூல் வேட்டை நடத்தி சுமார் 250 கோடிகளை அள்ளி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது வாரிசு.

இசையமைப்பாளர் தமன் கனவு :
தமன் தமிழ் திரை உலகில் பல படங்களுக்கு இசை அமைத்த போதிலும், அவருக்கு தெலுங்கில் தான் மார்கெட் மற்றும் பெயர் உயரத்தில் இருந்தது. இவருக்கு விஜய் படத்துக்கு இசை அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அது வாரிசு படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது. இந்த படத்தின் அனைத்து பாடல்களும் மெகா ஹிட் அடித்து உள்ளது தான் ஸ்பெஷல்.

ஜிமிக்கி பொண்ணு வீடியோ பாடல்:
அனிருத், ஜோனிதா காந்தி குரல்களில், விவேக் வரிகளில் ஜிமிக்கி பொண்ணு பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. டிரெண்ட் மற்றும் கவித்துவ வரிகள், தமன் இசை பாடலை வேறு ஒரு தளத்துக்கு கொண்டு சென்றது. தற்போது இதன் வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.
