ஜி வி பிரகாஷ் குமார் :
“வெய்யில்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் ஜி வி பிரகாஷ். என்ன தான் கலை பாரம்பரியத்தில் இருந்து வந்து இருந்தாலும், முதல் படத்தில் இருந்தே தனது உழைப்பு மூலமாக மட்டுமே இந்த புகழ் உச்சிக்கு வந்துள்ளார். ஆம், முதல் படமே அவருக்கு பல விருதுகளை மற்றும் பாராட்டையும் பெற்று தந்தது.
முக்கியமான படங்களில் ஜி வியின் இசை :
பொல்லாதவன், கிரீடம், குசேலன், அங்காடி தெரு, மதராசப்பட்டினம், ஆடுகளம், ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, தலைவா, தெய்வ திருமகள், சைவம், தெறி, சூராரை போற்று போன்று பல முக்கிய முன்னணி நடிகர்கள் படங்களில் பணியாற்றி உள்ளார் ஜி வி. கிட்டத்தட்ட ,100 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார் ஜி வி. சமீபத்தில் சூரரை போற்று படத்தின் பின்னணி இசைக்காக தேசிய விருதை வாங்கி உள்ளார்.
இசை அமைப்பாளர் டூ நடிகர் :
2015 ஆம் ஆண்டு டார்லிங் படத்தின் மூலம் நடிகராகவும் ஜி வி தமது இன்னொரு ட்ராக் ஐ தேர்வு செய்தார். அதிலும், தற்போது வரை வெற்றி வாகை சூடி வருகிறார். தொடர்ச்சியாக நடிகராக மிகவும் பிஸியாக வலம் வருகிறார். நடிவரகவே இதுவரை சுமார் 80 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார். அதோடு, ஒரு படத்தையும் தயாரித்து உள்ளார் (மதயானை கூட்டம்).
ஜி வியின் லைன் அப்ஸ் :
இடி முழக்கம், அடியே, கள்வன், 13, 4ஜி, பாஷா என்கிற ஆன்டனி போன்ற பல படங்கள் அவர் லீட்டாக நடித்து வர உள்ளது. அதே போல, நாக்கு இன்கோ பெயர் உந்தி, ஜப்பான், அநீதி, சர்தார் 2, SK 21, சைரன் போன்ற பல படங்கள் அவர் இசை அமைப்பில் வர உள்ளன. திரைத்துறையில் சுமார் 17 வருடங்களை கடந்து நடிகர், இசை அமைப்பாளர், தயாரிப்பாளர், பாடகர் என பல ரூபங்கள் எடுத்து வெற்றிகரமாக பயணித்து வருகிறார்.