ஜி20 அமைப்புக்கு இந்தியா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தலைமை ஏற்றது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு பல் வேறு மாநிலங்களில் ஜி20 கூட்டத்தை ஒருங்கிணைத்து வருகிறது. கோவாவில் சுற்றுலாதுறை தொடர்பாக ஒருங்கிணைப்பட்ட ஜி20 கூட்டம் சமீபத்தில் நிறைவுற்றது.இக்கூட்டத்தில் பங்கேற்று நாடு திரும்பினர்.இந்நிலையில் லண்டனில் பேசியுள்ள பிரிட்டன் அமைச்சர் ஜான் விட்டிங்டேல்,“ஜி20 அமைப்புக்கு தலைமை ஏற்றிருக்கும் இந்தியா மிகச் சிறப்பாக செயல்படுகிறது. கோவாவில் நடத்தப்பட்ட கூட்டம் சிறப்பாக ஒருங்கிணைப்பட்டிருந்தது.இக்கூட்டத்தில் சுற்றுலா துறையை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. கார்பன் உமிழ்வைக் குறைக்கும் வகையில், நீடித்த கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக உரையாடல் நடைபெற்றது. ஜி20 உச்சி மாநாட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதில் எங்கள் பிரதமர் ரிஷி பங்கேற்பார்” என்று கூறியுள்ளார்.

ஆக்கிரமிப்பு எங்கே உள்ளது சொல்லுங்க? அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னையில் ஏற்பட்டு உள்ள வெள்ள பாதிப்புகள் பற்றி பேச எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி...
Read More