Mnadu News

ஜி20 மாநாட்டில் சுவாரஸ்யம்: சல்யூட் அடித்து கொண்ட மோடி, ஜோ பைடன்.

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடந்த 2வது நாள் ஜி20 மாநாட்டில், உலக தலைவர்கள் அனைவரும் பாலிநகரில் உள்ள மாங்குரோவ் காட்டுக்கு விசிட் செய்தனர். அப்போது ஒவ்வொரு தலைவர்கள் இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர். பிரதமர் நரேந்திர மோடியும் இருக்கையில் அமர்ந்து இன்னொருவருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது நடந்து வந்தபடியே அமெரிக்க அதிபர் ஜோபைடன் பிரதமர் நரேந்திர மோடியை பார்த்த புன்னகைத்த படியே ‛வணக்கம்’ கூறும் வகையில் சல்யூட் செய்தார். இதை பார்த்த பிரதமர் நரேந்திர மோடியும் கேசுவலாக அமர்ந்திருந்த இருக்கையில் உட்கார்ந்தபடியே கையை உயர்த்தி ‛ஹாய்’ என சொன்னார். தற்போது இது தொடர்பான படம் இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது

Share this post with your friends