கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் ஒருநாள் கண்காட்சியை இஸ்ரோ தலைவர் சோம்நாத் திறந்துவைத்தார். பின்னர் பேசியுள்ள அவர்,இஸ்ரோவின் லட்சிய நிலவு திட்டமான சந்திராயன் 3ஐ விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக்கட்ட பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியிருப்பதாக கூறினார்.தற்போது,சந்திராயன் 3 விண்கலத்தை ஏந்தி செல்லும் மார்க்-3 ராக்கெட்டின் பரிசோதனையும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவை அனைத்தும் இம்மாத இறுதிக்குள் முடிந்துவிடும். அனைத்து சோதனைகளும் முடிந்தபிறகு இந்தியாவின் லட்சிய திட்டமான சந்திராயன் 3 அடுத்த மாதம் 12-19-க்கு இடையில் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்படும் என்று கூறி உள்ளார்.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More