ஜெயலலிதாவின் முழு உருவச் சிலையை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முழு உருவச் சிலையை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார். நெய்வேலியில் செவ்வாய் சந்தை அருகே ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்று ஜெயலலிதா சிலையை எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறாா்.