Mnadu News

ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டங்கள்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளா வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு, மார்ச் மாதம் 5, 6, 7 மற்றும் 10, 11, 12 ஆகிய 6 நாட்கள், ‘ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்’, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன. பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் விரைவில் வெளியிடப்படும். என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

Share this post with your friends