கட்டாய வெற்றி:
பீஸ்ட் பட தோல்விக்கு பிறகு நெல்சனும், அண்ணாத்த பட தோல்விக்கு பிறகு தலைவரும் ஒன்று சேர்ந்துள்ள படம் “ஜெயிலர்”. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் பல மொழி நட்சத்திர பட்டாளத்தின் சங்கமிப்பில் உருவாகி வருகிறது “ஜெயிலர்”. அனிருத் மூன்றாவது முறையாக ரஜினி படத்துக்கு இசை அமைகிறார்.

ரீலீஸ் தேதி அறிவித்த படக்குழு :
எந்த வித அலட்டலும் இல்லாமல் உருவாகி வரும் இப்படம் வரும் ஆகஸ்ட் 10 அன்று திரைக்கு வர உள்ளது. இதற்காக ரஜினி ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் ஆவலோடு காத்து உள்ளனர்.

முதல் சிங்கிள் :
மூன்றாவது முறையாக ரஜினி படத்துக்கு இசை அமைக்கிறார் ராக் ஸ்டார் அனிருத். ஆம், பேட்ட, தர்பார் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் வைரல் ஹிட் அடித்தது. இந்த நிலையில், தற்போது ஜெயிலர் படத்தின் முதல் பாடலை வெளியிட படக்குழு தயாராகி வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் வேளையில், நடிகை தமன்னா “ஜெயிலர்” செட்டில் இருந்து தான் நடனம் கற்று கொள்வது போல ஒரு வீடியோவை பகிர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
