சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்தன. அதோடு, தமது பேரன்களோடு தமது 73 வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தார்.

அவரது பிறந்த நாளை இன்னும் அழகாக்க அவர் நடித்து வரும் ஜெயிலர் படக்குழு அந்த படத்தில் அவரின் கேரக்டர் அறிமுகம் செய்யும் விதமாக ஒரு வீடியோ வெளியிட்டது.

முத்துவேல் பாண்டியன் என்பது தான் ரஜினியின் பெயர். தமது வயதுக்கு ஏற்ற கதையை அவர் தேர்வு செய்து உள்ளதால் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் அடுத்த வருடம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லிங்க் : https://youtu.be/DObwdl3xB7U