Mnadu News

ஜெர்மனியில் சிக்கிய இந்திய குழந்தை: பெற்றோரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் மறுப்பு.

குஜராத்தின் ஆமதாபாத்தை சேர்ந்த பவேஷ், ஜெர்மனியில் தன் மனைவி தாரா மற்றும் மகள் அரிஹாவுடன் வசித்து வந்தார். கடந்த 2021ஆம் ஆண்டு குழந்தையின் அந்தரங்க உறுப்பில் காயம் ஏற்பட்டதை அடுத்து, பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனையில், குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறப்பட்டதை அடுத்து, ஜெர்மனியின் குழந்தை நல அதிகாரிகள் குழந்தையை தங்கள் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டார்.குழந்தையை நேரடியாக தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் மூன்றாம் தரப்பான இந்திய நல சேவையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பவேஷ் மற்றும் தாரா தம்பதி பெர்லினின் பாங்கோவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.,இதனை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்க மறுத்ததுடன், ஜெர்மன் இளைஞர் சேவையான ஜூஜென்டாமிடம் ஒப்படைக்க வேண்டும். குழந்தையை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என முடிவு செய்யும் அதிகாரம் பெற்றோருக்கு இனி இல்லை எனக்கூறியதுடன், குழந்தைக்கு 2021 ஏப் மாதம் தலை மற்றும் முதுகு பகுதியில் குளித்த போது காயம் ஏற்பட்டதையும், சுட்டிக்காட்டியதுடன், குழந்தைக்கு இருக்கும் ஆபத்தை தவிர்க்க பெற்றோரின் கவனிப்பு மறுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்ததுடன், இரண்டு நாட்களும் 90 நிமிடங்கள் தங்கள் மகளுடன் நேரத்தை செலவிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்துவிட்டது.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More