அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில் அமெரிக்காவுக்கு சென்றுள்ளபிரதமர் மோடி, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்துப் பேசினார். வெள்ளை மாளிகைக்கு வருகைதந்த மோடியை ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் வரவேற்றனர்.இந்த சந்திப்பின்போது ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி, சந்தனப் பெட்டி ஒன்றை பரிசாக வழங்கினார். மைசூரிலிருந்து கொண்டுவரப்பட்ட சந்தனக் கட்டையை கொண்டு ஜெய்ப்பூரில் வடிவமைக்கப்பட்ட பெட்டியில், விநாயகர் சிலை உள்ளிட்ட பொருள்களை இடம்பெற்றிருந்தன.அதேபோல், ஜில் பைடனுக்கு 7புள்ளி ஐந்து கேரட் வைரக் கல்லை மோடி பரிசாக அளித்தார். இந்த வைரக்கல்லானது சூரிய சக்தி மற்றும் காற்றாலையால் உருவாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.அதே நேரம், பிரதமர் மோடிக்கு 20-ஆம் நூற்றாண்டில் கையால் எழுதப்பட்ட புத்தகத்தையும், பழமைவாய்ந்த அமெரிக்க புகைப்படக் கருவியையும் ஜோ பைடன் பரிசாக வழங்கினார்.
நரேந்திர மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி இன்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி...
Read More