வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. சேதுபதி படத்துக்கு பிறகு மீண்டும் அவர் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள படம் “டி எஸ் பி”. சன் பிக்சர்ஸ் நேரடி தயாரிப்பில் வருவதாக அறிவிப்பு சென்ற வருடம் வெளியாகி தற்போது ஸ்டோன் பெஞ்ச் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் வெளியாக உள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நேற்று வெளியானது. காதலன் காதலியின் திருமணத்துக்கு சென்று பாடும் பாடலாக இந்த பாடல் உருவாகி உள்ளது.

“நல்லா இருமா” என்ற அந்த பாடலை விஜய் முத்துப்பாண்டி என்ற புதுமுகம் எழுதியுள்ளார். உதித் நாராயண், மாளவிகா சுந்தர், ரஞ்சித் ஆகியோர் குரல்களில், டி இமான் இசையில் உருவாகி உள்ளது.

சாங் லிங்க் : https://youtu.be/bSIsZZZ3qK4