வாரிசு படத்துக்கு போட்டியாக துணிவு படத்தை பொங்கலுக்கு இறக்க படக்குழு அறிவித்து மாஸ் காட்டியது முதல் தற்போது வரை படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.
ஒரு பக்கம் வாரிசு பட பாடல்கள் மற்றும் ஆடியோ வெளியீட்டில் விஜய்யின் குட்டி ஸ்டோரி என இணையத்தை ஆட்டி வைத்த தளபதி அலைக்கு ஈடாக, துணிவு படக்குழு புதிய வகையில் தங்கள் புரொமோஷன் வித்தையை கையாண்டு ஓவர்சீஸ் வெளியீட்டை வானில் ஸ்கை டைவிங் வீரர்கள் பறந்தபடி துணிவு பட பேனரை கையில் எந்தியவாறு இறங்கி வந்து மாஸ் காட்டியது.
லைக்கா நிறுவனத்தின் இந்த யோசனையை பலரும் பாராட்டி வரும் நிலையில், டிசம்பர் 31 துணிவு நாள் என பதிவிட்டு அந்த போஸ்டரை அறிமுகம் செய்துள்ளனர். இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
லிங்க் : https://youtu.be/OVtCB5brReo