Mnadu News

டிப்ஸ் தமிழ் கொடுத்துள்ள அடுத்த விஷூவல் ட்ரீட்!

கிளாசிக் இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் நட்சத்திர பட்டாளமே நடித்து மாபெரும் வசூல் சாதனை புரிந்து வரும் காவிய திரைப்படம் “பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று”. இதுவரை 600 கோடிகளை வசூல் செய்து தமிழ் சினிமாவிற்கு பெருமை தேடி தந்துள்ளது.

இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் அனைவரையும் கவர்ந்த நிலையில், இப்படத்தின் இசை உரிமையை கைபற்றி உள்ள டிப்ஸ் தமிழ் நிறுவனம் ஒவ்வொரு வீடியோ பாடலையும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்து வருகிறது.

அந்த வகையில் நேற்று “தேவராளன் ஆட்டம்” பாடல் வெளியாகி உள்ளது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் 2023 ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.

சாங் லிங்க்: https://youtu.be/PaTBeGcDfHg 

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More