டிமான்டி காலனி :
2014 ஆம் ஆண்டு குறுகிய பட்ஜெட்டில் வெளியாகி ரசிகர்களை அலற வைத்தது டிமான்டி காலனி. அஜய் ஞான முத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் ரெட்டி ஆகியோர் நடிப்பில் வெளியாகி நல்ல வசூலையும், பெயரையும் பெற்று தந்தது.

இமைக்கா நொடிகள் வெற்றியும் கோப்ரா தோல்வியும் :
டிமான்டி காலனி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அஜய் ஞான முத்து, எந்த மாதிரி படம் இயக்க போகிறார் என்கிற ஆவல் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அந்த சமயத்தில் தான் மீண்டும் ஒரு பிளாக் பஸ்டர் படம் தந்தார், அது தான் “இமைக்கா நொடிகள்”. அனுராக் காஷ்யப், நயன்தாரா, அதர்வா என தரமான நடிகர் படையே இந்த படத்தை வெற்றி பெற வைத்தது.

ஆனால்,2019 ஆம் துவங்கிய கோப்ரா பட பணிகள் வேகமெடுத்து வந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக ஷூட்டிங் தள்ளி போனது, இந்த நிலையில், சென்ற வருடம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி மண்ணை கவ்வியது “கோப்ரா”.

டிமான்ட்டி காலனி 2 :
2022 ஆம் ஆண்டே டிமான்ட்டி காலனி இரண்டாவது பாகம் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. அருள்நிதி, பிரியா பவானி ஷங்கர், அருண் பாண்டியன் போன்ற பலர் முக்கிய ரோல்களில் நடித்து உள்ளனர். பல மாதங்களுக்கு முன்னர் சாம் சி எஸ் இசையில் “இருள் ஆளப் போகிறது” என்கிற டாக் லைன்நோடு முன்னோட்ட டீஸர் வெளியாகி ரசிகர்கள் இதை கொண்டாடினர். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்று உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. பிரி புரொடக்ஷன் பணிகள் தற்போது துவங்கி விரைவில் முடிவடையும் என்றும் ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் துவக்கத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.
