Mnadu News

டிவிட்டரில் அறிமுகமாகிறது வாய்ஸ் – விடியோ கால் வசதி: எலான் மஸ்க் அறிவிப்பு.

டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் 4 ஆயிரத்து 400 கோடி டாலரில் சுமார் 3 லட்சம் 64 ஆயிரம் கோடி ரூபாயில் ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியதையடுத்து, கடந்தாண்டு அக்டோபர் மாதம் அதன் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து பணியாளர்கள் நீக்கம், பதிவிடும் முறையில் நவீனமயமாக்கம், டிவிட்டர் ப்ளூ டிக்கிற்கு கட்டணம் உள்ளிட்ட அவரது அதிரடி நடவடிக்கைகள் சர்ச்சைக்குள்ளானது.இந்நிலையில், டிவிட்டரில் விரைவில் வாய்ஸ் மற்றும் விடியோ கால் வசதியை அறிமுகம் செய்யவுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.அதோடு, இதன்மூலம் உலகம் முழுவதும் யாரிடம் வேண்டுமானாலும் போன் நம்பர் கொடுக்காமல் உரையாடலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

ரயில்வே சிக்னல்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு ரயில்வே துறை கடிதம்.

அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் எழுதி உள்ள கடிதத்தில், ரயில்வே சிக்னல்...

Read More