டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சரிடம் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், உக்ரைனில் போர் தொடங்கியபோது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. ஆனால், உள்நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் எரிபொருள் விலையை உயர்த்தாமல், நஷ்டத்தை எதிர்கொள்ளுமாறு பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன.
இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துவிட்டபோதிலும், டீசல் விற்பனையில் ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் முதல் 4 ரூபாய் வரை நஷ்டம் தொடர்கிறது. அதே நேரத்தில் பெட்ரோல் விற்பனையில் நஷ்டம் நீங்கி லாபம் கிடைக்கிறது. டீசல் விற்பனையில் ஏற்படும் நஷ்டத்தை இதனைக் கொண்டு ஈடுகட்ட முயற்சிக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகம் உயர்ந்தபோதும், மக்கள் நலன் கருதி எண்ணெய் நிறுவனங்கள் பெரிய அளவில் விலையை உயர்த்தவில்லை என்றார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More