Mnadu News

டீ கடை மூலம் ஆண்டுக்கு ரூ.150 கோடி வருவாய் ஈட்டும் இளைஞர்கள்.

இந்தியாவில் அதிக மக்களால் விரும்பி பருகப்படும் பானம் என்றால் அது தேநீர்தான். அதேபோன்று டீ கடைகள் வெறும் தேநீர் வழங்குவதோடு மட்டுமல்லாமல், சிற்றுண்டி, மாலை நொறுக்குத்தீனி போன்றவற்றையும் விற்பனை செய்கின்றன. மத்தியப் பிரதேசமாநில இந்தூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் நாயக் மற்றும் அவரின் நீண்டகால நண்பரான அனுபவ் தூபே ஆகிய இருவர் சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்தனர்.இருவரும் தங்களிடமிருந்த 3 லட்சத்தை வைத்து சாய் சூட்டா பார் என்ற டீ கடையை வைத்துள்ளனர்.பெண் கள் விடுதி அருகே வைக்கப்பட்ட இந்த கடை குறுகிய இடைவெளியில் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த கிடைத்த லாபத்தில் மட்டுமே அடுத்தடுத்த கிளைகளைத் தொடங்கியுள்ளனர். தற்போது நாடு முழுவதும் 195 நகரங்களில் 400க்கும் அதிகமான கிளைக்கொண்டுள்ள டீ கடை மூலம் இளைஞர்கள் தற்போது ஆண்டுக்கு 150 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

Share this post with your friends

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் சிக்கிய ரோப் கார்: பயணிகளை பத்திரமாக மீட்பு.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் செயல்பட்டுவரும் ரோப் கார் சேவை திடீரென தொழில்நுட்பக்கோளாறு...

Read More