Mnadu News

டுவிட்டருக்கு அழுத்தம் கொடுத்ததாக முன்னாள் சி.இ.ஓ குற்றச்சாட்டு: மத்திய அரசு மறுப்பு.

‘பிரேக்கிங் பாயின்ட்ஸ்’ என்ற யூடியூப் நிறுவனத்துக்கு ட்விட்டர் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜேக் டார்ஸி அளித்தப் பேட்டியில், “இந்தியாவில் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடந்திய போது, அதுதொடர்பாக, மத்திய அரசிற்கு எதிராக பதிவுகளை வெளியிடும் டுவிட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என்று பல்வேறு வகையில் அழுத்தங்களும் வந்தன என்று கூறியிருந்தார்.இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இது அப்பட்டமான பொய். நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள 14 மற்றும் 19வது விதிகளை தொடர்ந்து அவர்கள் மீறி வந்தனர். பிறகு ஜூன் 2022 க்கு பிறகுதான் இந்திய சட்டத்துக்கு இணங்கி செயல்பட துவங்கினர். அதே போல் இந்த விவகாரத்தில் டுவிட்டர் ஊழியர்கள் யாரும் சிறைக்கு செல்லவில்லை. டுவிட்டர் அலுவலகமும் மூடப்பட்டவில்லை. அப்படி இருக்க டோர்சியின் பேச்சு முற்றிலும் தவறானது. பொய்யான செய்திகள் மூலம் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்க அரசு முயன்ற போது டோர்சி தலைமையின் கீழ் இயங்கி வந்த டுவிட்டர் நிறுவனம் ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டது. என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Share this post with your friends