Mnadu News

டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.

கடந்த சில தினங்களாக, கேரளாவில் எலி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் அதிகமாகப் பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுத்து, அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகள் கண்டறியப்பட்டால் துணை சுகாதார இயக்குனர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.இதையடுத்து, மாணவர்களுக்குக் காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகள் கண்டறியப்பட்டால் துவக்கத்திலேயே டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். என்று பொது சுகாதாரத்துறை கூறியுள்ளது.

Share this post with your friends