Mnadu News

டெல்லியில் கனமழை: கடும் போக்குவரத்து நெரிசல்.

கனமழை குறித்து பேசியுள்ள போக்குவரத்து காவலர்,ஜாமியா மெட்ரோ நிலையம் அருகே தண்ணீர் தேங்கி இருப்பதாக புகார் வந்தது. அதனைத் தொடர்ந்து சாராய் காலே கான், ரிங் சாலை, கீதா காலனி, அக்ஷர்தாம் கோவிலுக்கு செல்லும் பகுதி என தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளிலிருந்து தொடர்ந்து புகார்கள் வந்து குவிந்தது. அதோடு மத்திய டெல்லியின் காளி பாரி மார்க் பகுதியில் பலத்த மழையால் ஒரு மரம் வேரோடு சாய்ந்தது. இதனால், சராய்காலே கான், ரிங் சாலை, கீதா காலனி, அக்ஷர்தாம் கோவிலுக்கு செல்லும் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்தன.எ;னறு கூறினார்.இந்நிலையில், டெல்லியின் சில பகுதிகளில் மிதமான மழையும் ஒரு சில பகுதிகளில் பலத்த மழையும் பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Share this post with your friends