Mnadu News

டெல்லியில் காங்கிரஸ் ஆலோசனை: தெலங்கானா தேர்தலில் வெற்றி வியூகம் குறித்து திட்டம்.

தெலங்கானாவில் ஆட்சி செய்துவரும் சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இருந்து முன்னாள் எம்.பி பொங்குலேடி ஸ்ரீனிவாஸ் ரெட்டி, முன்னாள் அமைச்சர் ஜூபல்லி கிருஷ்ணராவ் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் என 12 பேர் காங்கிரஸில் இணைந்தனர்.இந்த சூழலில், இந்தாண்டு இறுதியில் தெலங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில்,கர்நாடகத்தைத் தொடர்ந்து தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி வியூகம் குறித்து காங்கிரஸ் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Share this post with your friends