Mnadu News

டெல்லியில் ‘காட்டாட்சி’ நடக்கிறது: முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள அம் மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்,டெல்லியின் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த மத்திய அரசிடம் உறுதியான திட்டம் இல்லை என்று தெரிகிறது.அதே நேரம், சட்டம் ஒழுங்கு குறித்த கூட்டத்துக்கு துணை நிலை ஆளுநர் அழைப்பது வெறும் சம்பிரதாயமாக தெரிகிறது.ஏனெனில், ஜி20 மாநாடு நடைபெறும் பிரகதி மைதானத்தில் பட்டப்பகலில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.அதோடு, டெல்லியில் ‘காட்டாட்சி’ நடைபெறுகிறது.எனவே, எங்களுக்கு சட்டம் ஒழுங்கை கொடுங்கள்,டெல்லியை பாதுகாப்பான நகரமாக மாற்றுவோம் என்று பேசியுள்ளார்.

Share this post with your friends