Mnadu News

டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் காட்டம்.

டெல்லியில் ஆர்.கே.புரம் பகுதியில் உள்ள அம்பேத்கர் பஸ்தியில், சகோதரிகள் பிங்கி, மற்றும் ஜோதியை ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. இந்த கொலை வழக்கில் அருண் மற்றும் மைக்கேல் உள்பட 3 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து உள்ளனர்.இதைபோல், டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தில் உள்ள ஆர்யபட்டா கல்லூரியில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் நிகில் சவுகான் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.இது குறித்து, பேசியுள்ள டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால்;, டெல்லியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. டெல்லியில் மக்கள் யாரும் பாதுகாப்பாக இல்லை. 19 வயது மாணவர் கல்லூரிக்கு வெளியே தனது பெண் தோழியுடன் நின்றபோது, சிலர் அவளைத் துன்புறுத்தியுள்ளனர்.சிறுவன் தனது தோழியை காப்பாற்ற முயன்ற போது கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். மற்ற இடங்களில், இரண்டு பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்ன நடக்கிறது?. மத்திய அரசும் டெல்லி அரசாங்கமும் இணைந்து, நடவடிக்கை எடுத்து நிலைமையை உடனடியாக சரிசெய்ய வேண்டும். என்று கூறி உள்ளார்.

Share this post with your friends