Mnadu News

டெல்லியில் பைக் டாக்ஸிகளுக்கு அரசு விதித்த தடை செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

டெல்லி அரசு கடந்த பிப்ரவரி மாதம் ரேபிடோ, உபர் உள்ளிட்ட பைக் டாக்ஸி சேவைகளைத் தடை செய்வதாக அறிவித்தது. தடையை மீறினால் 10ஆயிரம் ரூபாய் அபராதமும், ஓராண்டு சிறையும் விதிக்கப்படும் என்று கெடுபிடி விதித்தது.ஆனால், பைக் டாக்ஸி தடையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அப்போது பைக் டாக்ஸி இயக்குவது தொடர்பாக அரசாங்கம் இறுதிக் கொள்கையை வெளியிடும் வரை ரேபிடோ, உபெர் போன்ற பைக் டாக்ஸி சேவை வழங்குநர்கள் இயங்கலாம் என்று உயர் நீதிமன்றம் அறிவித்தது. அந்தத் தடையை எதிர்த்து டெல்லி மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்தது.அந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற விடுமுறைக் கால அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள் அனிருத்தா போஸ், ராஜேஷ் பிந்தால் பைக் டாக்ஸி தொடர்பாக அரசாங்கம் இறுதிக் கொள்கையை வகுக்கும் வரையில் உபெர், ரேபிடோ பைக் டாக்ஸிகளை இயக்க இயலாது. இந்த வழக்கினை டெல்லி உயர் நீதிமன்றம் மேற்கொண்டு விசாரிக்கலாம் என்று தெரிவித்தனர்.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More