டெல்லியின் தெற்கு துவாரகாவில் இன்று காலை 17 வயது பள்ளி மாணவி மீது அடையாளம் தெடெல்லியில்ரியாத மர்ம நபர்கள் இருவர் ஆசிட் வீசி உள்ளனர். இதில் அந்த மாணவியின் முகம், கண்களில் பாதிப்பு ஏற்பட்டு விழுந்துள்ளார்.
இந்த நிலையில் அந்த மாணவி சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. ஆசிட் வீச்சுக்கு காரணம் தெரியாத நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.