Mnadu News

டெல்லியில் 2வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்

டெல்லியில் 2-வது நாளாக விவசாயிகள் போராட்டம் தொடங்கி உள்ளது. டெல்லி எல்லைகளில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிங்கு, திக்ரி, காசிப்பூர் எல்லைகள் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. எல்லைகளில் மட்டுமின்றி, மத்திய டெல்லியின் முக்கிய சாலைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்தால், நாடாளுமன்றம் நோக்கி ஊர்வலம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், நாடாளுமன்றம் செல்லும் பாதைகள் மூடப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் அனைத்து வாயில்களிலும் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. கட்டிடத்தை சுற்றிலும் துணை ராணுவப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகள் மீது உரம், பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க பயன்படுத்தப்படும் டிரோன்களை பயன்படுத்தி 2வது நாளாக கண்ணீர் புகை குண்டு வீசப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ரப்பர் குண்டுகள் மூலம் விவசாயிகளை போலீசார் தாக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More