டெல்லியின் ஆர்.கே.புரம் அம்பேத்கர் பஸ்தியில்,30 வயதான பிங்கி,29 வயதான ஜோதி சகோதரிகள் துப்பாக்கியால் சுட்டு கொல்லபட்டனர். பணத்தகராறில் இரண்டு சகோதரிகள் கொல்லபட்டதாக கூறப்படுகிறது. சகோதரரான லலித் மற்றும் சகோதரிகளுக்கு இடையேயான கொடுக்கல் வாங்கல் தகராறு தொடர்பாக கொலை நடந்து உள்ளது.அதோடு, டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தில் உள்ள ஆர்யபட்டா கல்லூரியில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் நிகில் சவுகான் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.இந்நிலையில்,சகோதரிகள் கொலை வழக்கில் அருண் மற்றும் மைக்கேல் உள்பட 3 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த கொலை வழக்கு குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, டெல்லி மக்கள் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். ஆளுநர் அதிகாரத்தின் கீழ் இல்லாமல் ஆம் ஆத்மி ஆட்சியில் டெல்லியின் சட்டம் ஒழுங்கு இருந்திருந்தால், டெல்லி பாதுகாப்பாக இருந்திருக்கும் என கூறி உள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More