டெல்லியில் பாஜக தேசிய செயற்குழுவின் இரண்டாவது நாள் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் , டெல்லி அரசு ஊழலின் மையமாக உள்ளது, அவர்களின் ஊழலை பாஜக விரைவில் அம்பலப்படுத்தும். டெல்லியில் கடந்த 8 ஆண்டுகளில் மோடி அரசு சாலைக் கட்டமைப்பு முதல் மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவது வரை ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை வழங்கியுள்ளது. கேஜரிவால் அரசின் மீதான மக்கள் நம்பிக்கை குறைந்துவிட்டது. இது ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் முடிவுகளிலும் பிரதிபலித்ததால் அக்கட்சிக்கு மிகக் குறைவான பெரும்பான்மையே கிடைத்துள்ளது. எங்கள் புதிய உறுதிமொழியில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு செய்து வரும் வளர்ச்சிப் பணிகளை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சென்று 2024 மற்றும் 2025 தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும். ஆகையால், அரவிந்த் கேஜரிவாலை டெல்லியில் இருந்து வேரோடு பிடுங்கி எறிய இன்றே புதிய உறுதிமொழி எடுப்போம். என்று குறிப்பிட்டார்.

வளர்ச்சி பாதையில் இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்.
கர்நாடகாவில மருத்துவமனையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, மருத்துவ கல்வியில் ஏராளமான...
Read More