டெல்லியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதையடுத்து டெல்லியில் ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார் டெல்லி முதல் அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான கேஜரிவால். இதன் தொடர்ச்சியாக டெல்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவை சந்தித்து அவசரச் சட்டத்துக்கு ஆதரவு கோரினார் கேஜரிவால். கேஜரிவாலின் கோரிக்கைக்கு ஏற்ப டெல்லி அவசரச் சட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக டி.ராஜாவும் கூறியுள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More