தலைநகர் டெல்லியில் அம்மாநில துணை முதல் அமைச்சர் மணீஷ் சிசோடியா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: நான் டெல்லியின் துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை, டெல்லி தலைநகர் சட்டத்தின் அதிகாரங்களைப் பயன்படுத்தி அரசின் செயல்பாடுகளில் குறுக்கீடுகளை ஏற்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். மற்ற மாநிலங்களில் உள்ள கல்வித் துறை அமைச்சர்கள் தங்களது ஆசிரியர்களை வெளிநாடுகளுக்கு பயிற்சிக்காக அனுப்ப சுதந்திரமாக முடிவு எடுக்கும்போது டெல்லி கல்வித் துறை அமைச்சருக்கு மட்டும் அந்த உரிமை கிடையாதா? என்றார்.
முன்னதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், பஞ்சாப் மாநிலத்திலிருந்து 36 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பயிற்சிக்காக நாளை மறுநாள் (பிப்ரவரி 4) சிங்கப்பூருக்கு செல்ல உள்ளதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More