Mnadu News

டெல்லி கலால் கொள்கை: 8வது நபரை கைது செய்தது அமலாக்கத்துறை.

டெல்லி கலால் கொள்கை மோசடியில் எட்டாவது நபரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. டெல்லி கலால் கொள்கையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை விவகாரத்தில் எட்டாவது நபர் ராஜேஷ் ஜோஷி என்பவர் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஒரு விளம்பர நிறுவனத்துடன் தொடர்புடையவர் என்று அமலாக்கத் துறையினர் கூறியுள்ளனர்.குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட குற்றவாளி தினேஷ் அரோராவுடன் அவர் நெருங்கிய தொடர்புள்ளவர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. கோவா தேர்தலுக்காக ஜோஷி, அரோராவிடமிருந்து பணம் பெற்றார். இந்த பணம் கலால் கொள்கை ஊழலின் மூலம் வந்த வருமானம் என்று தெரிவிக்கப்படுகிறது. ஜோஷி ரோஸ் அவென்யூ மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அவரை இரண்டு வாரக் காவலில் வைக்க வேண்டும் அமலாக்கத்துறை தெரிவித்தன.முன்னதாக, பஞ்சாபைச் சேர்ந்த தொழிலதிபர் கௌதம் மல்ஹோத்ராவை அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் பிப்ரவரி 15 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட எட்டாவது நபரான ஜோஷி ஆவார். இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை இரண்டு குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது.

Share this post with your friends

4 நீதிபதிகளை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை: கொலீஜியம் நடவடிக்கை.

தமிழக மாவட்ட நீதிபதிகளான ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை உயர்நீதிமன்ற...

Read More