Mnadu News

டெல்லி-மும்பை விரைவுச்சாலை: பணிமுடிந்த முதற் கட்ட சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

ஆயிரத்து 386 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட நாட்டின் மிக நீளமான விரைவுச் சாலை டெல்லி மற்றும் மும்பையை இணைக்கும். இதற்கான மொத்த செலவு தோராயமாக 1 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.அதோடு,விரைவுச்சாலை திட்டம் முழுமையாக முடிந்தவுடன் டெல்லி-மும்பை பயணம் நேரம் 24 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாகக் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி-மும்பை விரைவுச்சாலை திட்டம் டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 6 மாநிலங்களை கடந்து கோட்டா, இந்தூர், ஜெய்ப்பூர், போபால், வதோதரா மற்றும் சூரத் போன்ற முக்கிய நகரங்களை இணைக்கிறது.டெல்லி-மும்பை இடையிலான விரைவுச்சாலை திட்டத்தின் முதல் பகுதியாக 246 கிலோ மீட்டர் தொலைவிற்கு டெல்லி-தௌசா-லால்கோட் பகுதி 12 ஆயிரத்து 150 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சாலையையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதன் மூலம் டெல்லியில் இருந்து ஜெய்ப்பூருக்கான பயண நேரம் 5 மணியில் இருந்து மூன்றரை மணி நேரமாக குறையும். இதனால் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Share this post with your friends

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்பொதுக்குழு வழக்கு: உயர்நீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவு.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம்...

Read More

செங்கல் சூளைக்கு தடை கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மதுரை மேலூர் அருகே இயங்கும் செங்கல் சூளையில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுசூழல்...

Read More