டெல்லி மாநகராட்சிக்கான மேயர் தேர்தலை முன்கூட்டியே நடத்த உத்தரவிடக் கோரி ஆம் ஆத்மி கட்சியின் மேயர் வேட்பாளர் ஷெல்லி ஓபராய் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மேயர் தேர்தல் மற்றும் எம்சிடி முதல் கூட்டத்திற்கான அறிவிக்கை 24 மணி நேரத்திற்குள் வெளியிடப்பட வேண்டும். அதோடு;, மேயர், துணை மேயர், நிலைக்குழு உறுப்பிர்கள் தேர்தலுக்கான தேதியும் அந்த அறிவிக்கையில் நிர்ணயிக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வரும் 22-ஆம் தேதி மேயர் தேர்தலை நடத்த துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு பரிந்துரை செய்துள்ளதாக டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.தற்போது அவரின் பரிந்துரையை ஏற்று மேயர் தேர்தலை வரும் 22 ஆம் தேதி நடத்த துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார்.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More