டெல்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக டெல்லி துணை முதல் அமைச்சர்; மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது.இதன் தொடர்ச்சியாக மணீஷ் சிசோடியா, திங்கள்கிழமை டெல்லி சிபிஐ ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு 5 நாள் சிபிஐ காவல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் தலையிட மறுப்பு தெரிவித்ததுடன், டெல்லி உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியது.இந்நிலையில் மணீஷ் சிசோடியா தரப்பில் அவருக்கு ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More