கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி இருந்தார் மஸ்க். பயனர்கள் தங்களது கருத்துகளை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் இந்த தளத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்தார். பயனர்களுக்கு சந்தா கட்டணம் தொடங்கி ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது என அவரது நடவடிக்கைகள் நீண்டன. இந்தச் சூழலில் லிண்டாவை புதிய சிஇஓ என மஸ்க் அறிவித்தார். அதோடு ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாக தலைமை மற்றும் சிடிஓ என தனது செயல்பாடு இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.அதன்படி, டர்னர் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தில் சுமார் 19 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும் கொண்ட லிண்டா யாக்காரினோ ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More