ஒரு சில ட்வீட்கள் மற்றும் கணக்குகளை முடக்கச் சொன்ன மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து ட்விட்டர் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணா, சமூக வலைதளங்களில் கருத்துகளை, பதிவுகளை தடை செய்யும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. எனவே மனு தள்ளுபடி செய்வதுடன், அரசின் உத்தரவை பின்பற்றாத ட்விட்டருக்கு 50 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதத் தொகையை 45 நாட்களுக்கு செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு 5ஆயிரம் ரூபாய் வீதம் அபராத தொகையில் கூடும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
வெள்ளை அறிக்கை வெளியிடுவது அவசியம் -தொல்.திருமாவளவன்
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டையில் விடுதலைப் சிறுத்தைகள் கட்சியின் மண்டல கூட்டம் அதன் தலைவர் தொல்.திருமாவளவன்...
Read More