Mnadu News

ட்விட்டரில் ‘ப்ளூ டிக்’ மீண்டும் நிறுத்திவைப்பு.

ட்விட்டர் பயன்பாட்டாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட கணக்கை குறிப்பிடும் நீல நிற குறியை (ப்ளூ டிக்) பெற மாதம் 8 அமெரிக்க டாலர் (ரூ.662) கட்டணமாக செலுத்த வேண்டும் என்று அதன் புதிய உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்து இருந்தார்.
இதன்மூலம் ‘ப்ளூ டிக்’ பயனாளிகள் பதிலளிப்பதில், தேடுதலில், குறிப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், போலி தகவல்களை அழிப்பதற்கு இது உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதோடு, ட்விட்டரில் தகவல்களைப் பதிவிடுபவர்களுக்கு வருவாயை ஈட்டுவதற்கும் இந்தக் கட்டணம் உதவும் என்று எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், போலி கணக்குகளை அடையாளம் காணும்வரை ‘ப்ளூ டிக்’ குறியீடு நிறுத்திவைக்கப்படுவதாக எலான் மஸ்க் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Share this post with your friends