Mnadu News

ட்விட்டர் ‘ப்ளூ டிக்’ கணக்கு மாதம் ரூ.660 கட்டணம்: மஸ்க் அறிவிப்பு.

கட்டணம் அறிவிப்பு தொடர்பாக எலான் மஸ்க் வெளிட்டுள்ள பதிவில், ட்விட்டர் பயனர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில், அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான ‘ப்ளூ டிக்’ வசதிக்கு இனி மாதந்தோறும் ரூ. 600 அதாவத 8 டாலர்கள வசூலிக்கப்படும். கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெறும் பயனர்களுக்கு பதில்கள், குறிப்புகள் மற்றும் தேடல்களில் முன்னுரிமை வழங்கப்படும். அதோடு, அதிக நேரங்கள் கொண்ட விடியோ மற்றும் ஆடியோள் பதிவிடும் வசதியும், பாதி விளம்பரங்கள் மட்டும் இருக்கும் வசதியும் வழங்கப்படும். இந்த கட்டணம் ப்ளூ டிக் வாங்கும் நாடுகளை பொறுத்து ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்றவாறு கட்டணம் மாறுபடும்.
இந்த கட்டணம் மூலம் பெறப்படும் வருமானத்தால், சிறந்த உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு வெகுமதியாக பகிர்ந்து அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Share this post with your friends