பருவமழை வலுத்ததையடுத்து, காய்கறி, பழங்கள் விலை அனைத்துமே கடந்த சில வாரங்களாக வேகமாக அதிகரித்துள்ளது.இது தொடர்பான பத்திரிகை செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ், ‘மக்கள் அதிகம் பயன்படுத்தும் தக்காளி, வெங்காயம், உருளைக் கிழக்கு ஆகியவற்றின் விலையை கட்டுக்குள் வைத்திருப்பது அரசின் முக்கியமான பணிகளில் ஒன்றாகும். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தவறான கொள்கைகளாலும், அலட்சியப் போக்காலும் இப்போது தக்காளி விலை கிலோ 100 ரூபாயாக அதிகரித்துள்ளது’ என்று கூறியுள்ளார்.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More