Mnadu News

தக்காளி விலை உயர்வு தற்காலிகமானது: மத்திய அரசு விளக்கம்.

நாடு முழுவதும் முக்கிய நகரங்கள் அனைத்திலும் தக்காளி ஒரு கிலோ 100 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியுள்ளது. ஓரிருநாளில் ஏற்பட்ட இந்த திடீர் விலை உயர்வு சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.இது தொடர்பாக நுகர்வோர் விவகாரத் துறை செயலர் ரோஹித் குமார் சிங் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில,தக்காளி விரைவில் அழுகிவிடக் கூடிய பொருள், அதனை பதுக்கி வைத்து விலையை உயர்த்த முடியாது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெய்த திடீர் மழை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பல இடங்களுக்கு தக்காளி விநியோகம் தடைபட்டுள்ளதால் விலை உயர்ந்துள்ளது. இது தற்காலிகமானதுதான். ஆண்டுதோறும் இந்த காலகட்டத்தில் இதுபோன்ற சிக்கல் ஏற்படுவது வழக்கம்.தக்காளி விநியோகம் அடுத்த சில நாள்களில் சீராகிவிடும், விலையும் குறைந்து முந்தைய நிலையை எட்டிவிடும் என்றார்.

Share this post with your friends