Mnadu News

தஞ்சையில் ராஜராஜன் சதய விழா தொடங்கியது.

சதய நட்சத்திரம், ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு ஆயிரத்து 37- வது சதய விழா இன்று காலை மங்கல இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து அப்பர் பேரவை சார்பில் திருமுறை பாராயணம் நடைபெற்றது.


முதல்நாளான இன்று கருத்தரங்கம், கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவின் இரண்டாம் நாளான நாளை காலை 8 மணிக்கு மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளார்.
பின்னர் திருமுறை வீதி உலாவும், அதனைத் தொடர்ந்து பல்வேறு இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ராஜராஜன் சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர்.
அதோடு, பெருவுடையாருக்கும், பெரிய நாயகிக்கும் 48 வகையான பேராபிஷேகமும் நடைபெற உள்ளது. சதய விழாவை முன்னிட்டு நாளைய தினம் தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends