Mnadu News

தஞ்சை பெண்ணுக்கு பாலியல் தொல்லை! சக ஊழியர் என்கிற போர்வையில் திரிந்த சைக்கோ கைது! நடந்தது என்ன?

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அந்த 24 வயதுடைய இளம் பெண். சென்னையில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில், அதே நிறுவனத்தில் வேலை செய்த செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் பகுதியை சேர்ந்த சுரேந்தர் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதை தனக்கு சாதகமாக்கி கொள்ள நினைத்த சுரேந்தர் அந்தப் பெண்ணிற்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ஆபாசமாக படம் எடுத்ததாக தெரிகிறது.

அத்தோடு நிற்காமல் நான் சொல்வதை நீ கேட்கவில்லை எனில் இந்த அந்தரங்க படங்களை உங்கள் உறவினருக்கு அனுப்பி விடுவேன் என பலமுறை மிரட்டி உள்ளான்.
சொன்னது போலவே, சில நாட்களுக்கு முன்பு அந்தப் பெண்ணின் ஆபாச படங்களை அந்த பெண்ணின் உறவினர் சிலருக்கு வாட்ஸ்அப் இல் அனுப்பி உள்ளான். தகவல் அறிந்து அதிர்ந்த பெண் தரப்பு இதுகுறித்து ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

வழக்கு பதிவின் பேரில், போலீசார் சென்னை சென்று சுரேந்தரை கைது செய்து ஒரத்தநாடு அழைத்து வந்து, ஒரத்தநாடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More