Mnadu News

தடகளத்தில் 3 தங்கப் பதக்கங்கள் வென்று 106 வயது மூதாட்டி ராம்பாய் சாதனை: குவியும் பாராட்டு.

ஹரியாணா மாநிலம் சார்க்கி தாத்ரி மாவட்டத்தில் உள்ள கத்மா கிராமத்தைச் சேர்ந்தவர் ரம்பாய். கடந்த 1917-ஆம் ஆண்டு பிறந்தவர். மான் கவுரை பார்த்து விளையாட்டில் அவருக்கு ஆர்வம் வந்தது. அதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் விளையாட்டு பயிற்சியை தொடங்கினார். கடந்த ஆண்டு 45 புள்ளி நான்கு பூஸ்ஸியம் நொடிகளில் 100 மீட்டர் தூரத்தை கடந்து மான் கவுர் படைத்த சாதனையை தகர்த்தார். மான் கவர், கடந்த 2017ஆம் ஆண்டு; 101 வயதில் 100 மீட்டர் தூரத்தை 74 நொடிகளில் கடந்திருந்தார். தற்போது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப்பில் 3 தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். ஒவ்வொரு பிரிவிலும் 5 முதல் 6 போட்டியாளர்களை சந்தித்து இந்த பதக்கத்தை அவர் வென்றுள்ளார்.“106 வயதில் 3 தங்கம் வென்று உத்வேகம் அளிக்கிறார்” என ராம்பாயை புகழ்ந்துள்ளார் நடிகர் மாதவன்.

Share this post with your friends