Mnadu News

தண்டனைக்கு தயாராக இருங்கள்”: ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை.

வாக்னர் ஆயுதக் குழுவின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து அதிபர் விளாடிமிர் புதின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் அவர், “நாம் இப்போது ரஷ்ய மக்களின் வாழ்வுக்காகவும், பாதுகாப்புக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்தச் சூழலில் இத்தகைய வேறுபாடுகளுக்கு இடம் கொடுக்கலாமா? இருந்தும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள இந்த ஆயுதக் குழு மீது நமது நடவடிக்கை மிகக் கடுமையானதாக இருக்கப் போகிறது. மாஸ்கோவில் தீவிரவாத தடுப்பு நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஸ்டோவில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் ரஷ்ய மக்கள், ராணுவம், சட்ட அமைப்புகள் அனைத்தும் ஆயுதக் குழுவுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும்.வாக்னர் குழு முதுகில் குத்தி நம்பிக்கை துரோகம் செய்துள்ளது. ரஷ்யா நீண்ட வரலாறு கொண்ட நாடாக செழித்தோங்க வேண்டும் என்றே பாடுபடுகிறோம். இந்தச் சூழலில் தனிநபர்களின் தனிப்பட்ட விருப்ப வெறுப்புகள் தேச துரோகமாகும். நாட்டையும் நாட்டு மக்களையும் இதிலிருந்து காப்பாற்றுவோம்.இந்த ஆயுதக் கிளர்ச்சியை தூண்டிய தலைவர் கிரிமினல் குற்றம் புரிந்துள்ளார். அவர் மீது கிரிமினல் வழக்குப் பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். எனவே, அவரைப் பின்பற்றாமல் வாக்னர் படையினர் ரஷ்ய ராணுவத்திடம் சரணடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More